லண்டனில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

14 புரட்டாசி 2025 ஞாயிறு 15:56 | பார்வைகள் : 247
லண்டனில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் போலீசாருடன் தள்ளுமுள்ளு நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டது.
தற்போது லண்டனில் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது. 1.5 லட்சம் பேர் பேரணியில் பங்கேற்றதால் மொத்த நகரமே குலுங்கியது.
தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் ‛Unite The Kingdom' என்ற பெயரில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. இந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டத்திற்கு 42 வயதான டாமி ராபின்சன் தலைமை தாங்கினார்.
பேரணியில் பங்கேற்றவர்கள் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் பொலிசாருடன் தள்ளுமுள்ளு நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் பலர் குற்றங்களை செய்ததாக, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025