எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரி செய்துவிடலாம் - சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

14 புரட்டாசி 2025 ஞாயிறு 20:07 | பார்வைகள் : 224
எலும்பு முறிவை 3 நிமிடத்தில் ஓட்டும் பசையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
விபத்தின் போது எலும்பு முறிவு ஏற்பட்டால், காயத்தின் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
பொதுவாக, எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்து, உலோக தகடுகள் மூலம் எலும்புகள் இணைக்கப்படுகிறது.
எலும்புகள் ஒன்றாக இணைந்த பின்னர், சிலருக்கு அந்த உலோக தகடுகள் நீக்கப்படும், சிலருக்கு உடலின் உள்ளேயே இருக்கும்.
இந்த முறையில், எலும்பு முறிவு குணமாக சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை காலம் எடுக்கும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், 3 நிமிடங்களில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சர் ரன் ரன் ஷா மருத்துவமனையின் இணை தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான குழு தலைவர் லின் சியான்ஃபெங் குழுவினர் இதனை கண்டறிந்துள்ளனர்.
எலும்பு-02 என அழைக்கப்படும் இந்த பசை, எலும்பு முறிவின் போது, இரத்தம் இருந்தால் கூட, இரு எலும்புகளை 3 நிமிடங்களுக்குள் துல்லியமாக ஒட்டி விடும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தொற்று அபாயங்களையும் குறைக்கிறது. மேலும், எலும்புகள் ஒட்டப்பட்ட பின்னர், இந்த பசை தானாகவே இயற்கையாகவே உடலின் மூலம் உறிஞ்சப்பட்டு விடும்.
150 பேருக்கு இந்த பசையை வைத்து சோதனை நடத்தப்பட்டு, இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீருக்கடியில் உள்ள பாலத்தில், சிப்பிகள் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்த பிறகு, இந்த எலும்பு பசையை கண்டுபிடிக்கும் யோசனை தோன்றியதாக லின் தெரிவித்துள்ளார்.
இந்த பசை வெற்றிகரமாக செயல்பட்டு, சந்தையில் பரவலாக்கப்பட்டால், மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025