மற்றொரு NATO நாட்டிற்குள் அத்துமீறிய ரஷ்ய ட்ரோன்கள்

15 புரட்டாசி 2025 திங்கள் 05:07 | பார்வைகள் : 102
போலந்தை தொடர்ந்து மற்றொரு NATO நாட்டிற்குள் ரஷ்ய ட்ரோன் அத்துமீறிய நுழைந்துள்ளது.
ரஷ்யா நடத்திய தாக்குதலின்போது, ஒரு ட்ரோன் ரோமானியாவின் வான்வெளி எல்லையை மீறி நுழைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ஒரே வாரத்தில் இரண்டாவது NATO நாட்டிற்குள் ரஷ்யாவின் ட்ரோன்கள் அத்துமீறியுள்ளன.
ரோமானியாவின் F-16 போர் விமானங்கள் இரண்டும் சனிக்கிழமை இரவில் அவசரமாக இயக்கப்பட்டன.
ரஷ்யாவின் ட்ரோன், ரோமானிய எல்லையில் உள்ள Chilia Veche என்ற கிராமத்தின் அருகே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்துவிட்டதாக France24 செய்தி நிறுவனம் தெறிவித்துள்ளது.
இந்த ட்ரோன் மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாண்டி செல்லவில்லை என்பதால் பொது மக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் ட்ரோன் பாகங்கள் விழுந்திருக்கலாம் என்பதால் தேடுதல் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
ரஷ்யா 2022-ல் உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கியதிலிருந்து ரோமானிய எல்லைக்கு அருகிலுள்ள துறைமுகங்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனால், ரோமானியாவில் ட்ரோன் பாகங்கள் விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், NATO-வின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பை தீவிரப்படுத்திவருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025