உணவகத்தில் இனவெறி? சமூக வலைதள பிரபலத்தின் குற்றச்சாட்டு வைரல்!!
14 புரட்டாசி 2025 ஞாயிறு 21:23 | பார்வைகள் : 4067
பரிஸில் உள்ள ஒரு உணவகத்தில் தனது பிறந்தநாள் விருந்துக்காக மேசை பதிவு செய்த சமூக வலைதள பிரபலம் யாசின், “ஆப்ரிக்கப் பெயர்” வைத்திருப்பதால் தன் இட ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், அதே இடத்தில் “பிரெஞ்சு பெயர்” கொண்ட தனது தோழியின் இடஒதுக்கீடு உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வீடியோவொன்றில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
இது தனிப்பட்ட சம்பவமல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முந்தைய காலங்களிலும் பரிஸில் பல உணவகங்கள் “பெயர், மதம், தோற்றம்” காரணமாக வாடிக்கையாளர்களை நிராகரித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. பிரெஞ்சு சட்டப்படி, பாகுபாடு காட்டி சேவையை மறுப்பது குற்றமாகும்; இதற்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் யூரோ அபராதமும் விதிக்கப்படலாம் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan