விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறாரா சிறுத்தை சிவா?

15 புரட்டாசி 2025 திங்கள் 12:43 | பார்வைகள் : 160
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை இயக்கும் ஒரு இயக்குனராக இருந்து வந்தார் சிறுத்தை சிவா. அவர் இயக்கும் படங்கள் எல்லாம் மிகவும் சுமாரான கதை மற்றும் அரதப் பழசான மசாலா டெம்ப்ளேட்டாக இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் வாய்ப்பளித்து வந்தனர்.
இதுவரை தமிழ் சினிமாவில் அவர் இயக்கியதெல்லாம் கார்த்தி, அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற உச்ச நடிகர்களைதான். கடைசியாக அவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா திரைப்படம் மோசமான எதிர்ம்றை விமர்சனங்களைப் பெற்று அவரை கேலிக்குரியவராக்கியது.
இந்நிலையில் அவர் அடுத்த அஜித் படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியானது. ஆனால் அஜித் ரசிகர்கள் அவர் மட்டும் வேண்டாம் என புலம்பினர். அதனால் அஜித், தற்போதைக்கு நாம் படம் பண்ண வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த படத்தையும் அறிவிக்காமல் இருக்கும் சிறுத்தை சிவா விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை எழுதியுள்ளதாகவும் சமீபத்தில் இருவரும் சந்தித்து அது சம்மந்தமாக விவாதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கதையைக் கேட்ட விஜய் சேதுபதி முழு திரைக்கதையையும் கேட்டுள்ளதாகவும், அதைப் படித்தபின்னர் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025