Paristamil Navigation Paristamil advert login

ஆண்கள் திருமணத்தைத் தவிர்ப்பதற்கான காரணம் தெரியுமா ?

ஆண்கள் திருமணத்தைத் தவிர்ப்பதற்கான காரணம் தெரியுமா ?

15 புரட்டாசி 2025 திங்கள் 12:43 | பார்வைகள் : 121


பல ஆண்கள் திருமணத்தை தாமதமாக்குது முதிர்ச்சியற்றதாலோ, காதலைத் தவிர்ப்பதாலோ அல்ல. அவர்கள் தங்களது அடையாளம், சுதந்திரம் மற்றும் உணர்ச்சிகளை இழக்கக்கூடும் என்ற பயத்தால் தான் அப்படி செய்வதாகவும், அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும்  காரணங்களையும் இந்த பதிவில் பார்ப்போம்.

திருமணத்தைத் தவிர்க்கும்  ஆண்களை நாம் “முதிர்ச்சியற்றவர்கள்” அல்லது “பயப்படுபவர்கள்” என்று கூறுவதுண்டு. இது ஒரு எளிய விளக்கமாக தோன்றினாலும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை மிகவும் சிக்கலானது. பல ஆண்கள் திருமணத்திலிருந்து விலகுவதற்கு அவர்களுக்குள் இருக்கும் பயம் காரணமில்லை, உண்மையான காரணம் அவர்கள் அதிகமாக சிந்திப்பது தான்.

தங்கள் தந்தையை சோர்வாகக் கண்டனர், மாமாக்களை அமைதியாகக் கண்டனர், நண்பர்கள் மாறிவிட்டதை பார்த்துள்ளனர். இவை அனைத்துமே அவர்களுக்குள் ஒருவித கேள்வியை எழுப்புகிறது. இன்றைய காலத்தில் திருமணம் என்பது, ஆணிடம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, திரும்ப அவர்களுக்கு உண்மையான வளர்ச்சியை தருகிறதா? இது கடைசி வரை நீடிக்குமா? போன்ற பல யோசனைகள் அவர்களை மூழ்கடிக்கிறது.

அவர்கள் காதலுக்கு பயப்படவில்லை, தங்களை இழந்து விடுவோமோ என்றே பயப்படுகிறார்கள்
திருமணம் என்பது வாழ்க்கை துணையைத் தேர்வு செய்வது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்க வேண்டிய நிலையும் ஆகும். அதில் ஆண்கள் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகள்...
- சோர்வாக இருந்தாலும் சம்பாதிக்கவும்.
- சிரமத்தில் இருந்தாலும் தாங்க வேண்டும்
- தன்னை யாரும் காப்பாற்றாதபோதும் மற்றவர்களை காக்க வேண்டும்
- துன்பத்தை யாரிடமும் சொல்ல முடியாவிட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டும்

இவ்வாறாக, திருமணத்துக்கு அவர்கள் பயப்படுவதில்லை, அதில் தெரியாமல் காணாமல் போய்விடுவோமோ என்கிற பயமே அவர்களை சூழ்கிறது.

தற்போதைய திருமணங்கள் நவீனமயமாக தோன்றினாலும், பழைய வழக்கத்தின் நிழல் இன்னமும் தொடர்கிறது. ஆண் என்றால் நிலைத்தன்மை, வருமானம், தியாகம் என்றும், பெண் என்றால் மென்மை, அன்பு என்பது இன்னமும் பார்க்கப்படுகிறது. ஆண் அதிகமாகச் சம்பாதித்து, அதிகமாகக் கொடுக்க வேண்டும். ஆனால் கேள்வி கேட்க அவருக்கு இடம் இல்லை. அவர் சொல்வதைக் கேட்க யாரும் தயாராகவும் இருப்பதில்லை.

நவீன  பெண், சுதந்திரமும் லட்சியமும் கொண்டவள். ஆனால், அவள் திருமணம் செய்யும் ஆண், நிதி, உணர்ச்சி, அறிவு என எல்லா தளங்களிலும் ஒருபோதும் தடுமாறாமல் பொருந்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார். அவர் பலவீனமாக இருக்க முடியாது, உடைந்து போக முடியாது. ஆண்கள் பொறுப்பிலிருந்து நலுவதில்லை, சாத்தியமற்ற எதிர்பார்ப்பிலிருந்து ஓடுகிறார்கள்.

ஆண்கள், தங்களுடைய தாய்மார்கள் குடும்பத்திற்காக அவர்களது கனவுகளையும், ஆசைகளையும் தியாகம் செய்ததைப் பார்த்து வளர்ந்தனர். அதனால், 'திருமணம் என்பது சமரசம்' என்று சொன்னால், அவர்கள் உணர்வது: நீங்கள் உங்களை இழக்க வேண்டி இருந்தாலும், முகத்தில் சிரிப்பை வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்கள் உண்மையான அன்பையும், உணர்ச்சி பாதுகாப்பையுமே விரும்புகிறார்கள். அவர்கள் விரும்புவது, தங்களது வேலை, வருமானம், பொறுப்புகளை போன்றவற்றை அல்ல, உண்மையாக அவர்களை நேசிக்கும் ஒருவரை தான். முகமூடி இன்றி இருக்க முடியும் ஒரு இடத்தையே தேடுகிறார்கள்.
 

எனவே, திருமணத்தைத் தாமதப்படுத்தும் ஒவ்வொரு ஆணும் முதிர்ச்சியற்றவர் என்று அர்த்தமல்ல. பலர் தங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க நினைத்தே திருமணத்தை தவிர்க்கிறார்கள். அவர்கள் காதலுக்கு பயப்படவில்லை, அதில் தங்களின் அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்றே பயப்படுகிறார்கள்.

ஆண்கள் ஏன் தயங்குகிறார்கள் என்று கிண்டல் செய்வதை விட, அவர்கள் உண்மையில் எதை காப்பாற்ற விரும்புகிறார்கள் என்பதை கேட்க வேண்டிய நேரம் இது. திருமணம் என்பது ஒருவரைச் சிறையில் அடைப்பதற்கான இடம் அல்ல, மாறாக இருவரும் முகமூடிகளை கழற்றி, உண்மையானவர்களாக, நேசிக்கப்படும் ஒரு உறவாக இருக்க வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்