Paristamil Navigation Paristamil advert login

விபத்துக்குள்ளான பாடசாலை பேருந்து! - 17 பேர் காயம்!!

விபத்துக்குள்ளான பாடசாலை பேருந்து! - 17 பேர் காயம்!!

15 புரட்டாசி 2025 திங்கள் 14:11 | பார்வைகள் : 309


பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு பிரான்சின் Cahors (Lot) நகரில் இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 7.20 மணிக்கு இடம்பெற்றது. மாணவர்கள், ஆசிரியர்கள் என மொத்தமாக 40 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று Chemin des Durands  பகுதியில் பயணித்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, மரத்தில் சென்று மோதியது.

17 பேர் காயமடைந்துள்ளனர். சில மாணவர்களுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. எவருக்கும் உயிராபத்துக்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்