ரஷ்யாவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்த உக்ரைன்

16 புரட்டாசி 2025 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 247
ரஷ்யாவில் உள்ள மிகப்பெரும் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றின் மீது 14.09.2025 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்கிராட் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரிஷி மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
தங்கள் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு அந்நாட்டின் மசகு எண்ணெய் வளங்களே காரணம் எனக் கூறி, அதன் உட்கட்டமைப்புகள் மீது கடந்த சில வாரங்களாக உக்ரைன் நடத்திவரும் தாக்குதலின் தொடா்ச்சியாகவே இந்த நடவடிக்கை பாா்க்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை உறுதிசெய்த உக்ரைன் இராணுவம் கிரிஷி நிலையத்தில் தீப்பற்றி எரிந்து புகை வெளியான புகைப்படங்களைப் பகிா்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யா தரப்பில் எவ்வித தகவல்களும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால் தங்களை நோக்கி உக்ரைன் ஏவிய 80 ட்ரோன்களை தாக்கி அழித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்தது.
ரஷ்யாவின் மிகப்பெரும் மசகு எண்ணெய் நிலையங்களில் ஒன்றான கிரிஷியில் ஒரு நாளைக்கு 3.5 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.