மோடியின் 75வது பிறந்தநாளுக்கு மெஸ்ஸி அனுப்பியுள்ள பரிசு

16 புரட்டாசி 2025 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 114
மோடியின் 75வது பிறந்தநாளுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பரிசு வழங்கியுள்ளார்.
கால்பந்து ஜாம்பவானான அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியாவிலும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் மெஸ்ஸி, இந்தியாவிற்கு வர உள்ளார். நவம்பரில் கேரளா வரும் அவர் அங்கு நட்பு ரீதியான போட்டியில் விளையாட உள்ளார்.
அதனை தொடர்ந்து, டிசம்பரில், கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அவர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
முன்னதாக 2011 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற வெனிசுலாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் பங்கேற்க வருகை தந்தார். தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக இந்தியா வருகிறார்.
மெஸ்ஸியின் இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு 'GOAT Tour of India 2025' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில், நாளை(செப்டம்பர் 15) பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் வர உள்ளது.
இதற்காக, தனது கையொப்பமிட்ட 2022 FIFA உலகக்கோப்பை அர்ஜென்டினா ஜெஸ்ஸியை பரிசாக அனுப்பியுள்ளார்.