400 மீற்றர் ஆழத்தில் இரு சடலங்கள் - மீட்பு!!
 
                    16 புரட்டாசி 2025 செவ்வாய் 11:24 | பார்வைகள் : 1673
மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இருவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவர்களது சடலம் Hautes-Alpes இல் உள்ள Mount Sirac மலைப்பகுதியில் நேற்று செப்டம்பர் 15, திங்கட்கிழமை மீட்கப்பட்டது.
அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை Écrins பனிமலையில் ஏறியபோது அங்கிருந்து இருவரும் விழுந்ததாக அஞ்சப்படுகிறது. ஒருவர் தவறி விழ, அவரைக் காப்பாற்ற முயற்சித்த இரண்டாம் நபரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லை என தெரியவந்ததன் பின்னர் அவர்களை தேடும் பணி இடம்பெற்றது.
பின்னர் நேற்று மாலை அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன. இருவரில் ஒருவர் தீயணைப்பு வீரர் எனவும், மற்றையவர் இராணுவ வீரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களது சடலங்கள் 400 மீற்றர் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan