இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மில்லியன் யூரோக்கள் வென்ற நபர்!!
 
                    16 புரட்டாசி 2025 செவ்வாய் 19:19 | பார்வைகள் : 3488
யூரோமில்லியன் சீட்டிழுப்பில் நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிபெறுவது இது இரண்டாவது முறையாகும்.
2023 ஆம் ஆண்டில் இதே ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற ஒருவர் மீண்டும் கடந்தவாரம் அதே தொகையை மீண்டும் வென்றுள்ளார். குறித்த நபர், இத்தாலியின் வெனீஸ் நகரில் வசிக்கும் பிரெஞ்சு நபர் என Française des Jeux (FDJ) தெரிவித்துள்ளது.
குறித்த நபர் அண்மையில் விவாகரத்தானவர் எனவும், அவர் சமீபத்திலேயே அவரது முன்னாள் காதலியை கரம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறுகிய காலத்தில் இரு தடவைகள் இதுபோன்ற பெரும் தொகை பணத்தை ஒரே நபர் வெல்லுவது மிக அரிதான நிகழ்வு என தெரிவிக்கப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan