இந்தியா ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்: டென்மார்க் பிரதமருடன் மோடி பேச்சு

17 புரட்டாசி 2025 புதன் 05:18 | பார்வைகள் : 140
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் உடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்துவது குறித்து எங்களது விவாதித்தோம் என மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டென்மார்க் பிரதமர் மெட்டெ பிரெட்ரிக்சன் உடன் நடத்திய ஆலோசனை சிறப்பாக அமைந்தது. நமது பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்தவும், எங்களது உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதி செய்தோம். ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள டென்மார்க்கிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்த முயற்சிகள் குறித்து விவாதித்தோம். இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
டென் மார்க் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உறவையும் பிராந்திய ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து மோடியும், பிரெட்ரிக்சனும் விவாதித்தனர். சர்வதேச சவால்கள் குறித்து கருத்துக்களை பரிமாறி கொண்டனர். உக்ரைன் மீதான ரஷ்யா மீதான தாக்குதல் காரணமாக, சர்வதேச சவால்கள் குறித்தும் விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.