Paristamil Navigation Paristamil advert login

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை; ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை; ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு

17 புரட்டாசி 2025 புதன் 08:18 | பார்வைகள் : 142


ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த தலைவலியாக உருவாகியுள்ள அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஐந்து சுற்றுக்கள் இந்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விவசாயம் மற்றும் பால்பண்ணைத் துறையில் இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தடைபட்டது. அமெரிக்க பிரதிநிதிகளும் இந்தியா வரவில்லை.

இதனிடையே, சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடியும், இந்த பேச்சுக்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டு இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று (செப் 16) மீண்டும் தொடங்கி உள்ளது. இரு நாட்டு அதிகாரிகளும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தியா சார்பில், வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் பங்கேற்றுள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரண்டன் லின்ச் பங்கேற்று இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்