Paristamil Navigation Paristamil advert login

90% சதவீத TGV க்கள் தடைப்படுகின்றன!!

90% சதவீத TGV க்கள் தடைப்படுகின்றன!!

17 புரட்டாசி 2025 புதன் 09:38 | பார்வைகள் : 674


செப்டம்பர் 18, நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ள வேலை நிறுத்தம் காரணமாக 90% சதவீதமான TGV சேவைகள் தடைப்பட உள்ளன.

மெற்றோக்கள், TER மற்றும் TGV க்களுடன், சர்வதேச சேவைகளான யூரோ ஸ்டார் சேவைகளும் தடைப்பட உள்ளன. குறிப்பாக TGV சேவைகள் 90% சதவீதமானவை நாளை தடைப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

CGT-Cheminots, Unsa ferroviaire, SUD-Rail மற்றும் CFDT-Cheminots  ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், போக்குவரத்து துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. 

”கறுப்பு நாள்” என அடையாளப்படுத்தப்படும் இந்த வேலை நிறுத்தத்தில், மருத்துவத்துறை, கல்வித்துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்