செப் 18 ஆர்ப்பாட்டம்! - களமிறங்குகிறது கவச வாகனங்கள்!!

17 புரட்டாசி 2025 புதன் 12:58 | பார்வைகள் : 610
நாளை செப்டம்பர் 18 ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெற உள்ள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பிற்காக 80,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை விட மிக அதிகளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புக்காக 24 கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜொந்தாமினருக்கு சொந்தமான இந்த வாகனங்களுடன் 15 தண்ணீர் கொள்கலன் வாகனங்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர், ஜொந்தாமினர் என மொத்தமாக 80,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர்.
செப்டம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை விட அதிகமானோர் இம்முறை பங்கேற்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.