மனிதனின் ஆயுட்காலத்தை நீடிக்க ஆர்வம் காட்டும் ரஷ்யா

17 புரட்டாசி 2025 புதன் 17:08 | பார்வைகள் : 197
மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து கொண்டு செல்வது குறித்து ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்று இருக்கின்றன.
எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் ரஷ்யாவில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஐரோப்பிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுகளுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை போல சீனாவும் கூட வயதாவதை தடுத்து வாழ்நாள் நீட்டிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.