Paristamil Navigation Paristamil advert login

பாடகி Aya Nakamura இனை அவமதித்த 10 பேருக்கு குற்றப்பணம்!!

பாடகி Aya Nakamura இனை அவமதித்த 10 பேருக்கு குற்றப்பணம்!!

17 புரட்டாசி 2025 புதன் 18:12 | பார்வைகள் : 350


பிரெஞ்சுப் பாடகி Aya Nakamura இனை அவமதித்த பத்து பேருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

பாடகி மீது நிறவெறியை தூண்டும் விதமாக கருத்துக்கள் வெளியிட்டதாக  குறிப்பிட்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. குறிப்பாக ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வின்  போது Aya, பாடல்கள் பாடியிருந்தார். அவர் கறுப்பின பாடகி என்பதை குறித்து, அவருக்கு பரிசில் இடம் இல்லை என சில கருத்துக்களை குறித்த நபர்கள் தெரிவித்திருந்தனர்.

"இது பரிஸ். இங்கு அயா போன்றோருக்கு இடமில்லை. இது ஒன்றும் பமாகோ சந்தை இல்லை" என இணையத்தில் கருத்து பதிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு €1,000 யூரோக்கள் தொடக்கம் €3,000 யூரோக்கள் வரை குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்