கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! - 800,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

17 புரட்டாசி 2025 புதன் 19:12 | பார்வைகள் : 994
நாளை, வியாழக்கிழமை 'கறுப்பு நாள்' என அடையாளப்படுத்தப்பட்டு பெரும் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தோடு ஒப்பிடுகையில், நான்கு மடங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளனர். 197,000 பேர் அன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், நாளை 800,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, பரிஸ் மற்றும் புறநகரங்களில் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு வன்முறையாளர்கள் தொடர்பில் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரிசில் 50,000 தொடக்கம் 100,000 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளனர்.