வெப்ப அலை, மழை குறைவு – Mont Roucous நீர் விநியோகம் பாதிப்பு!!

17 புரட்டாசி 2025 புதன் 20:42 | பார்வைகள் : 517
புகழ்பெற்ற கனிம நீர் தயாரிப்பு நிறுவனம் மோன் ருக்கூ (Mont Roucous), திடீர் தட்டுப்பாட்டால் கிடைக்காமல் போயுள்ளது. குழந்தைகளுக்கான பால் கலவையில் பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய நீராக அறியப்படும் இந்த நிறுவனம், அதிகரித்து வரும் தேவையை நிறைவேற்ற உற்பத்தி திறன் போதவில்லை என விளக்கியுள்ளது. வருடத்திற்கு 200 மில்லியன் பாட்டில்களுக்கு மேல் நீர் எடுக்கக் கூடாது என உள்ளூர் நிர்வாகம் விதித்துள்ள வரம்பும் விநியோக தாமதத்திற்கு காரணமாகியுள்ளது.
இந்நிலையில், வெப்ப அலை மற்றும் மழை பற்றாக்குறை காரணமாக நீரூற்று வற்றிப் போனதால் நிலைமை மேலும் கடுமையடைந்துள்ளது. சில பகுதிகளில் குடிநீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், அதிக அளவில் நீர் எடுப்பது இயற்கை வளத்தை பாதிக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளன. இதேவேளை, குடிநீர் நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளில் உற்பத்தியை இரட்டிப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.