Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் செய்யும் இந்த தவறுகள் இடுப்பு சதையை அதிகரிக்கும்

பெண்கள் செய்யும் இந்த தவறுகள் இடுப்பு சதையை அதிகரிக்கும்

17 வைகாசி 2021 திங்கள் 07:13 | பார்வைகள் : 8371


 இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதியடைகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அன்றாட உணவு பழக்கமே. ஊட்டச்சத்துக்கள் இல்லாதது செயற்கை இனிப்பு பொருட்களை உட்கொள்வதும், பாஸ்ட் புட் உணவுகளும் இதற்கு காரணம்.

 
அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதும், அதற்கு தகுந்த உடல் உழைப்பு இல்லாததுமே உடல் எடை அதிகரிக்க காரணம். உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் இடுப்பு பகுதியில் உள்ள சதையை குறைப்பது கடினம்.
 
 
ஏன் என்றால் இடுப்புப் பகுதியில் (hip) தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி இடுப்புச் சதைப் பகுதி அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
 
பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
 
* கலோரி குறைவான உணவை சாப்பிடுவதும், இடுப்பு பகுதிக்கு அதிகப் அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
 
* காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.
 
* வயிறு நிறைய உணவு சாப்பிடாமல், உணவை குறைவாக சாப்பிட்டு பழச்சாறு அருந்தலாம்.
 
* தினமும் இரவு தூங்க செல்லும் முன்னர் சோம்புவை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரித்து இடுப்பு சதையை (hip) குறைக்க உதவுகிறது.
 
* வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
 
* மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். இது  உடலில் இருக்கும் வாயுக்களையும், கழிவுகளையும் நீக்குகிறது.
 
* இடுப்புப் பகுதியை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஜாக்கிங். தினமும் அதிகாலை எழுந்து குறைந்தது அரை மணி நேரமாவது ஜாக்கிங் செல்வதை வழக்கமாக்குங்கள்.  
 
* இடுப்பினை சுற்றியிருக்கும் கொழுப்பு குறைக்க வேண்டுமென்றால் இடுப்பிற்கு அதிக உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். இடுப்பிற்கும் வயிற்றிற்கும் அதிக அழுத்தம் தரக்கூடிய வகையில் அந்த பயிற்சிகள் இருக்க வேண்டும். அதற்கென வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்னென்ன என இங்கு காண்போம்.
 
1. நேராக நின்று உங்கள் கைகளை நேராக நீட்டுங்கள், பின்னர் முட்டி மடங்குமாறு நேராக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இருபது முறை இவ்வாறு செய்ய வேண்டும். இந்த பயிற்சி மேற்கொள்ளும் முழுப் பாதமும் தரையில் பட வேண்டும்.  
 
2. ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
 
3. தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து மடக்கிய காலை நீட்டி வலது காலை மடக்கவும்.  இப்படி 25 தடவை செய்த பிறகு இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடது பக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இப்படி தினமும் செய்வதால் இடுப்பின் (hip) அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்