Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேஷியாவை அதிரவைத்த நிலநடுக்கம் - 29 பேர் படுகாயம்

இந்தோனேஷியாவை அதிரவைத்த நிலநடுக்கம் - 29 பேர் படுகாயம்

18 ஆவணி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 233


இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் நேற்று 17.08.2025 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

5.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் உருவாகியுள்ளது.

 

சுமார் 15 தடவைகளுக்கும் மேலாக அதிர்வுகள் ஏற்பட்டதால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்து 29 பேர் படு காயமடைந்துள்ளனர்.

 

 

காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

அப் பகுதி மக்கள் நிலநடுக்கத்தின் காரணமாக மிகவும் அச்சத்தில் உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்