Paristamil Navigation Paristamil advert login

டாம் குரூஸ் உடன் இணைந்து நடிக்க மறுத்தது ஏன்? பகத் பாசில் விளக்கம்

டாம் குரூஸ் உடன்  இணைந்து நடிக்க மறுத்தது ஏன்? பகத் பாசில் விளக்கம்

18 ஆவணி 2025 திங்கள் 09:46 | பார்வைகள் : 218


ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தபோது மறுத்தது ஏன் என நடிகர் பகத் பாசில் விளக்கம் அளித்துள்ளார். Amores Perros, Birdman, The Revenant உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஆஸ்கர் விருது வென்றவருமான அலெஹான்ட்ரோ இனாரிட்டு இயக்கும் புதிய படத்தில் டாம் குரூஸ் நடிக்கிறார்.

இந்திய நடிகர்களில் தனித்துவ நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் பகத் பாசிலை இந்த படத்திற்காக இயக்குநர் அணுகியதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள பகத் பாசில், இயக்குநருக்கு என் நடிப்பு பிடித்திருந்தபோதும் அவர்களைப் போன்ற மொழி உச்சரிப்பு தனக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்காக 4 மாதங்கள் அமெரிக்காவில் பயிற்சி எடுக்க வேண்டி இருந்த நிலையில் அதற்கான செலவை அவர்கள் தர மறுத்ததால் உச்சரிப்புக்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என அப்படத்தில் இருந்து விலகியதாக பகத் பாசில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பகத் பாசில், வடிவேலு நடிப்பில் அண்மையில் வெளியாகி வித்தியாசமான கதைக்களத்திற்காக வரவேற்பைப் பெற்ற மாரீசன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார். பகத் பாசில், வடிவேலு இருவரின் நடிப்பிற்கும் தீனி போடும் கதைக்களமாக இருந்த இந்த படம் இதுவரை 8 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

5 மொழிகளில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. வரும் 22ஆம் தேதி முதல் இந்த படத்தை காணலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. வரும் 22ஆம் தேதி முதல் இந்த படத்தை காணலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்