"நான் வெட்கப்படுகிறேன்; இதை அனுபவித்ததில்லை": கண்ணீர்விட்டு கதறி அழுத நெய்மர்

18 ஆவணி 2025 திங்கள் 13:47 | பார்வைகள் : 113
வாஸ்கோடகாமா அணிக்கு எதிரான படுதோல்வியால் நட்சத்திர வீரர் நெய்மர் கதறி அழுத வீடியோ வைரலாகியுள்ளது.
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் (Neymar) சாண்டோஸ் கிளப் அணியில் விளையாடி வருகிறார்.
Serie A தொடரின் போட்டி ஒன்றில் வாஸ்கோடகாமா அணியை சாண்டோஸ் (Santos) எதிர்கொண்டது.
இப்போட்டியில் வாஸ்கோடகாமா (Vasco da Gama) அணி 6-0 என்ற கணக்கில் சாண்டோஸை தோற்கடித்தது.
இந்த படுதோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் சாண்டோஸ் வீரர் நெய்மர் கதறி அழுதார்.
அவர், "நான் வெட்கப்படுகிறேன். எங்கள் ஆட்டத்தில் நான் முற்றிலும் ஏமாற்றமடைந்தேன். இது மிகவும் அவமானகரமான உணர்வு. இதை நான் என் வாழ்வில் அனுபவித்ததில்லை" என்று கூறினார்.
நெய்மர் தோல்வியால் கதறி அழுத வீரர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.