Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் வீடியோ கால் மோசடி...

வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் வீடியோ கால் மோசடி...

18 ஆவணி 2025 திங்கள் 14:47 | பார்வைகள் : 125


தொழில்நுட்பம் வளர வளர அதை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவார்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான சைபர் மோசடிகளில், இந்தியர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், தற்போது வாட்சப் செயலி மூலம், புது வகையான Whatsapp Screen Mirroring மோசடி அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த வகை மோசடியில் ஈடுபடும் மோசடியாளர்கள் தங்களை வங்கி அல்லது நிதி நிறுவன ஊழியர்கள் போல் காட்டிக்கொண்டு, உங்களை தொடர்பு கொள்வார்கள்.

உங்கள் வங்கி கணக்கில் சிக்கல் உள்ளது எனக்கூறி, உங்களின் நம்பிக்கையை பெற வீடியோ அழைப்புக்கு வருமாறு கூறுவார்கள்.

அதன் பின்னர், உங்கள் செல்போன் திரையை பகிர்ந்தால்(Screen Sharing) தான் இதனை சரி செய்ய முடியும் என கூறுவார்கள்.

அவர்கள் கூறியபடி நீங்கள் திரையை பகிர்ந்தால், உங்கள் வாங்கி செயலிக்கு உள்ளே நுழையுமாறு அறிவுறுத்துவார்கள்.

அப்படி நீங்கள் செய்யும் போது, நீங்கள் உள்ளிடும் கடவுச்சொல்(Password) உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அவர்களால் பார்க்க முடியும். உங்களுக்கு வரும் OTP யையும் அவர்களால் காண முடியும்.

இதன் மூலம், உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் அவர்களால் திருட முடியும்.

வங்கி அல்லது அரசு துறைகளில் இருந்து பேசுவதாக யாரேனும் கூறினால் அவர்களின் நம்பகத்தன்மையை சரி பார்க்க வேண்டும்.

பொதுவாக அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை எடுக்க வேண்டாம்.

அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம்.

திரை பகிர்வின் போது, நிதி பயன்பாடுகளை(வங்கி செயலி, UPI பணப்பரிமாற்றம்) ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

வாட்ஸ்அப் செயலியில் தானியங்கி பதிவிறக்கத்தை(Auto - Download) அணைத்து வைக்கவும். இதன் மூலம் நீங்கள் டவுன்லோட் செய்வது உங்களின் கண்காணிப்பில் இருக்கும்.

சந்தேகத்திற்கிடமான அழைப்பு வந்தால், cybercrime.gov.in என்ற இணையத்தளத்திலோ, 1930 என்ற எண்ணை அழைத்தோ புகார் அளிக்கலாம்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்