Paristamil Navigation Paristamil advert login

தண்டவாளங்களில் சோலார் பேனல்கள் பொருத்தி மின் உற்பத்தி: இந்திய ரயில்வே

தண்டவாளங்களில் சோலார் பேனல்கள் பொருத்தி மின் உற்பத்தி: இந்திய ரயில்வே

19 ஆவணி 2025 செவ்வாய் 08:53 | பார்வைகள் : 100


ரயில் தண்டவாளங்களில் சோலார் பேனல்களை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ரயில்வே தொடங்கி இருக்கிறது.

நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை மின்சார உற்பத்தி நிலையங்களாக மாற்றும் திட்டத்தில் ரயில்வே துறை இறங்கி இருக்கிறது. அதற்காக ரயில் தண்டவாளங்களில் எளிதில் அகற்றக் கூடிய வகையிலான சோலார் பேனல்களை அமைக்கும் புதிய முயற்சியில் ரயில்வே துறை வெற்றி கண்டுள்ளது.

இந்த வெற்றியை வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில்வே ஊழியர்கள் சாத்தியப்படுத்தி உள்ளனர். இந்த புதிய முன்னோடி திட்டம் ஆக.15ல் தொடங்கப்பட்டு உள்ளது, 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட 70 மீட்டர் நீளத்தைக் கொண்டு உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் நரேஷ் பால்சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;

தற்போது செயலில் உள்ள ரயில் பாதைகளுக்கு இடையில் இந்த சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.எவ்வித போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.

இந்த திட்டம் சூரிய ஆற்றல் பயன்பாட்டில் ஒரு புதிய பரிமாணம் மட்டுமல்ல, இனி வரும் காலங்களில் இந்திய ரயில்வேயில் பசுமை ஆற்றல் உற்பத்திக்கான வலுவான மாதிரியாக செயல்படும்.

இவ்வாறு நரேஷ்பால் சிங் கூறியுள்ளார்.

இந்திய ரயில்வேயில் தண்டவாளங்கள் 1.2 லட்சம் கிமீ பரப்பளவில் இருப்பதால், தண்டவாளங்களுக்கு இடையிலான இடைவெளியில் இந்த பேனல்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் பேனல்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 3.21 யூனிட்கள் உற்பத்தியாகும்.

இந்த திட்டத்தை விரிவுபடுத்தினால் ஆண்டுதோறும் ஒரு கிலோ மீட்டருக்கு கிட்டத்தட்ட 321,00 kwh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது நிபுணர்களின் பார்வையாக உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்