Paristamil Navigation Paristamil advert login

இன்பநிதி தயாரிக்கும் முதல் படம் இதுவா?

இன்பநிதி தயாரிக்கும் முதல் படம் இதுவா?

20 ஆவணி 2025 புதன் 06:20 | பார்வைகள் : 696


உதயநிதி ஸ்டாலின் நிர்வகித்து வந்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இன்பநிதி பொறுப்பேற்று உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. தன் தந்தையைப் போல இன்பநிதியும் சினிமா படங்களை தயாரிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இன்பநிதி பொறுப்பேற்ற பின் அவர் தயாரிக்க உள்ள படம் பற்றிய அப்டேட் ஒன்றும் கசிந்துள்ளது.

அதன்படி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தான் இன்பநிதி முதலில் தயாரிக்க உள்ளாராம். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படம் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அவர் அடுத்ததாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரிக்க உள்ளதாம். இதுபற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்