சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - 10 பேர் பலி

20 ஆவணி 2025 புதன் 06:58 | பார்வைகள் : 207
சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளதுடன் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, கனமழை, வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025