செப்டம்பர் 10 ஆம் தேதியின் மறியல் போராட்டம் -ஆர்வத்துடன் கவனித்து வரும் சோசலிசக் கட்சி!

20 ஆவணி 2025 புதன் 13:45 | பார்வைகள் : 344
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ பொதுமக்கள் நிதியத்தில் ஏற்படுத்தவிருக்கும் மக்களிற்கான பெரும் பாதிப்பையும் அரசின் தேவையற்ற நடவடிக்கைகளையும் எதிர்த்தும் ஏற்பாடு செய்யப்படும் "செப்டம்பர் 10-ம் தேதி அனைத்தையும் முடக்குவோம்" என்ற போராட்டத்தில் பங்கேற்பதை LFI (La France insoumise) உறுதியாக அறிவித்துள்ள நிலையில், சோசலிசக் கட்சி தனது பங்கேற்பை இன்னும் தெளிவுபடுத்தாமல், நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
பிரோன்சுவா பய்ரூ 2026 வரவு செலவு திட்டத்திற்காக ஏற்படுத்தவிருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பிரான்சின் பல்வேறு திசைகளிலிருந்தும் "அனைத்தையும் முடக்குவோம்" என்ற அழைப்புகள் எழுந்துள்ளன.
சிலர் இந்தக் போராட்டத்தை "மஞ்சள் சட்டை" (Gilets jaunes) இயக்கத்துடன் ஒப்பிட்டுள்ளதோடு, இந்த இயக்கம் வலதுசாரி கட்சிகளால், சில சமயங்களில் சதி சிந்தனையுடன் ஊக்குவிக்கப்படுவதாகவும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
இதை மறுத்த லா பிரான்ஸ் இன்சுமிஸ் (LFI) நாடு முழுவதும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை, சோசலிசக் கட்சி, சற்றே தொலைவில் நின்று, சூழ்நிலையை நெருக்கமாகக் கவனிக்கிறது.
சோசலிசக் கட்சியின் நிலை
சோசலிசக் கட்சியின் பேச்சாளரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான குளோயே ரிதெல்(Chloé Ridel), இந்த இயக்கத்தின் பின்னணியில் உள்ள "கோபத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என குறிப்பிட்டார். எனினும், இந்த இயக்கம் இன்னும் "மிகத் தெளிவற்றதாக" இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"இது பொதுமக்களின் நியாயமான அதிருப்தியின் வெளிப்பாடு. பாராளுமன்றம் இயங்க முடியாமல் போகும் போது, எல்லா வரவுகளும் 49-3 மூலம் நிறைவேற்றப்படும் போது, மக்கள் தெருக்களில் குரல் கொடுக்கிறார்கள். மஞ்சள் சட்டை இயக்கமும், செப்டம்பர் 10 இயக்கமும் எமானுவல் மக்ரோனின் அரசியல் நடைமுறையின் விளைவுகள். அது ஒரு அதிகாரபூர்வமான, மேலிருந்து இறங்கும் ஆட்சி முறையாகும்." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1