Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் சடலங்கள்.. பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது!

சென் நதியில் சடலங்கள்.. பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது!

20 ஆவணி 2025 புதன் 13:46 | பார்வைகள் : 2195


அண்மையில் சென் நதியில் இருந்து நான்கு சடலங்களை காவல்துறையினர் மீட்டிருந்தமை அறிந்ததே. குறித்த சம்பவத்தில் தற்போது திருப்புமுனை ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 13, புதன்கிழமை Choisy-le-Roi (Val-de-Marne) நகரை ஊடறுக்கும் சென் நதியில் இருந்து நான்கு சடலங்களை காவல்துறையினர் மீட்டனர். அதன் தொடர்ச்சியாக ஓகஸ்ட் 20, இன்று புதன்கிழமை காலை சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குற்றவியல் தடுப்பு பிரிவினர் குறித்த நபரைக் கைது செய்தததாகவும், அவர் பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனவும், அடுத்துவரும் 96 மணிநேரங்களுக்கு அவர் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபர் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்