Paristamil Navigation Paristamil advert login

உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்

உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்

1 வைகாசி 2021 சனி 05:26 | பார்வைகள் : 9555


 கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

 
நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
 
கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்
 
எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.
 
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
 
நமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்தத்தில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்