முதுமையை விரட்டி உடல் ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9629
சுமார் நூறு வருட காலங்களுக்கு முன்பு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 40-50 வரைதான் இருந்தது. ஆனால் இன்று சுமார் 80 வயது வரை மனிதனின் ஆயுள் நீடிக்கின்றது. முதுமையிலும் அநேகர் நல்ல மன உறுதியோடு இருக்கின்றனர். ஆக இன்று மனிதனுக்குத் தேவையானது என்ன?
* தன் காலம் வரை தானே தன்னை கவனித்துக் கொள்ளும் நிலையில் இருப்பது.
* கடும் நோய்கள் தனக்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது.
* நட்பு, உறவு வட்டாரங்களோடு நல்ல தொடர்பில் இருப்பது.
* கால சூழ்நிலையினால் ஏற்படும் மாற்றங்களை எதிர் கொள்ளும் மன நிலையில் இருப்பது.
* இருப்பதில் திருப்தியோடு இருப்பது. பொதுவாக நூறு வயதிற்கு அருகே சென்றவர்களில் வாழ்க்கையினை ஆராய்ந்தால் அவர்கள் அதிகமான உடல் வேதனை, உள்ள வேதனை என குறை கூறியது இல்லை.
* ஓர் உயர்வான நல்ல மனநிலையோடு வாழ்ந்துள்ளனர்
* அவரை உற்றமும், சுற்றமும் பாராட்டும்படியே நடந்து கொள்கின்றனர்.
* ஆன்மீக வழிகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர். பொதுவாக அதிக மனஉளைச்சல் உடையவர்கள் மறதிக்கு ஆளாகின்றனர். வயது கூடும் பொழுது மன உளைச்சல் எளிதில் ஒருவரை தாக்கி விடுவதால் மறதியும் அதிகமாகக்கூடி விடுகின்றது.
வலி கொடுக்கும் மூட்டு முதுமையின் அடையாளம் என கருதப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவெனில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதன் காரணமே ஒரு குறிப்பிட்ட வயதினை நெருங்கும் பொழுது பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. எனவே இளைய சமுதாயமே இன்றே உடற்பயிற்சியினை ஆரம்பியுங்கள்.
அளவான உடற்பயிற்சி கூட மூட்டு வலியினையும், எலும்பு தேய்மானத்தினையும் வெகுவாகக் குறைந்து விடும். தேய்ந்த மெல்லிய எலும்பும், மடிந்த கூன் போன்ற தோற்றமும் முதுமை வெளிப்பாடு என்று நாம் நினைக்கின்றோம். இறப்பைத் தவிர வேறு எதுவுமே வெல்ல முடியாதது அல்ல.
இது ஆய்வுகள் கூறும் உண்மை. பரம்பரை, ஜீன்ஸ் (மரபணுக்கள்) காரணமாக நம் தோற்றம், நோய், முதுமை, நரை இவற்றினை காரணம் காட்டுகின்றோம். அப்படியானால் இரட்டை பிறப்புடைய இருவருக்கு எல்லாமே ஒன்று போல் தானே இருக்க வேண்டும்.
ஆனால் ஆய்வுகள் அவர்கள் வளர வளர பல்வேறு வேறுபாடுகளை அவர்கள் உடலில் காட்டின. ஒருவர் உண்ணும் உணவும், அவரது வாழ்க்கை முறையுமே அவர்களின் ஆரோக்கியத்தினை நிர்ணயிக்கின்றன. யார் ஒருவர் நல்ல சமூகத்தொடர்புடன், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனரோ அவர்களின் ஆயுட்காலம் மற்றவர்களை விட 15% கூடுதலாக அதிகரிக்கின்றது.
வயது கூடும் பொழுது மூளை சுருங்குகின்றது என்பது 2002ல் கூறப்பட்டது. ஆனால் 1991லேயே அதிக உளைச்சல் வேதனை உடையவர்களின் மூளை சுருங்குவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆக முதுமையை பலவற்றிக்கும் காரணம் என்று கூற முடியாது அல்லவா? மூளை வயது கூடும் பொழுது புது தொடர் அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பழைய அமைப்புகள் உறுதியாகச் செய்கின்றது.
உங்கள் இடுப்பு சுற்றளவு 88செ.மீ (34 இன்ச்) அல்லது அதற்குக் குறைவாக பெண்ணுக்கு இருப்பதும் 100 செ.மீ (40 இன்ச்) அல்லது அதற்குக் குறைவாக ஆணுக்கு இருப்பதும் சீரான ஆரோக்கியமான உடலமைப்பை கொண்டதாக கருதப்படுகின்றது. உடல் பயிற்சி, நடைபயிற்சி என்று பேசுவது அதிகமாகி விட்டாலும் இதனை நாம் எவ்வளவு தூரம் கடை பிடிக்கிறோம் என்பதுதான் தெரியவில்லை.
அப்படி என்னதான் உடற்பயிற்சி நன்மை பயக்கிறது. மூட்டு வலி குறைகின்றது/தடுக்கப்படுகின்றது. எலும்புகள் உறுதியாகின்றன. படபடப்பு நீங்குகிறது. உடல் சக்தி கூடுகின்றது. தேவையான உடல் எடையை அடைய முடிகின்றது. சர்க்கரை நோய் தவிர்க்கப்படுகின்றது/கட்டுப்படுகின்றது.
மூளை சுறுசுறுப்பாய் செயல்படுகின்றது. தசைகள் உறுதி படுகின்றன. கை, கால் நீட்டி மடக்குவதில் பிரச்சினை இன்றி இருக்கின்றது. இன்னமும் பல நன்மைகள் கொண்ட உடற்பயிற்சியின் அநேகமாக தினமும் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை செய்து வந்தால் ஒரு வருடத்தில் 8 சதவீத அளவு உடலின் இயக்கத்திறன் கூடுகின்றது.
25-30 சதவீதம் வரை சர்க்கரை இரத்தத்தில் கட்டுப்படுத்தப்படுக்கின்றது. 1-3 சதவீதம் வரை எலும்பின் அளவு அதிகப்படுகின்றது. 50 சதவீதம் வரை ஜீரண சக்தி கூடுகின்றது. 45 சதவீதம் வரை அடுத்த 8 வருடங்களில் ஒருவர் இறக்கும் வாய்ப்பு குறைகின்றது.
65 சதவீதம் மறதி குறைகின்றது. எப்பொழுதும் குடும்பத்தினருடனும், நண்பர்களிடமும் நல்ல தொடர்பில் இருங்கள். நல்ல நண்பரோடு நடைபயிற்சி செய்வதே மனதிற்கும் உடலுக்கும் நல்லது.
கணவனோ, மனைவியோ நல்ல வார்த்தைகளால் உங்கள் அன்பினை வெளிப்படுத்தும் பொழுது மூளையையும் உடலினையும் ஆட்டி வைக்கும் ஸ்டிரஸ் ஹார்மோன் அளவு குறையும். நல்ல புத்தகங்களை படிப்பது `மறதி நோயினை' தள்ளி வைக்கும்.