வியட்நாமில் சூறாவளி அபாயம்...!5 லட்சம் மக்கள் வெளியேற்றம்

25 ஆவணி 2025 திங்கள் 18:26 | பார்வைகள் : 205
வியட்நாமில் சூறாவளி ஏற்படும் அபாயம் இருப்பதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் வியட்நாம் வழியாக வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா நாங் ஆகிய இடங்களில் வசிக்கும் 586,000 பேர் தற்காலிகமாக தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூறாவளியுடன் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, அந்தப் பகுதியில் விமானச் சேவையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கஜிகி சூறாவளி , சீனாவின் ஹைனான் பகுதியையும் பாதித்தது. மேலும் சூறாவளியுடன் 320 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3