பரிஸ் : Bouygues காட்சியறை கொள்ளை!!

25 ஆவணி 2025 திங்கள் 20:30 | பார்வைகள் : 380
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Bouygues காட்சியறை கொள்ளையிடப்பட்டுள்ளது. விலையுயர்ந்த தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 25, இன்று திங்கட்கிழமை காலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. avenue du Général-Leclerc பகுதியில் உள்ள குறித்த காட்சியறைக்கு காலை 10.30 மணி அளவில் கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள் அங்கிருந்த ஊழியரை மிரட்டி புதிய தொலைபேசிகளை அள்ளிச் சென்றனர்.
மொத்தமாக 30 தொலைபேசிகள் எனவும், அவற்றின் மதிப்பு €40,000 யூரோக்கள் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் இரு கொள்ளையர்களையும் உடனடியாக கைது செய்தனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3