Paristamil Navigation Paristamil advert login

இனப்பெருக்கத்திற்கு நச்சு என நகபூச்சுகளில் உள்ள இராசயனத்திற்கு செப்டம்பர் 1 முதல் தடை!!!!

இனப்பெருக்கத்திற்கு நச்சு என  நகபூச்சுகளில் உள்ள   இராசயனத்திற்கு செப்டம்பர் 1 முதல் தடை!!!!

25 ஆவணி 2025 திங்கள் 22:18 | பார்வைகள் : 440


செப்டம்பர் 1, முதல், நகபூச்சு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் TPO (L'oxyde de diphényl triméthylbenzoyl phosphine) தடை செய்யப்படுகிறது. இந்தப் பொருள் இனப்பெருக்கத்துக்கு நச்சு என பிரான்ஸ் DGCCRF அறிவித்துள்ளது. 

இதுவரை, தொழில்முறை நிபுணர்களால் மட்டுமே, அதிகபட்சம் 5% அளவில் செயற்கை நகபூச்சு தயாரிப்புகளில் பயன்படுத்த அனுமதி இருந்தது. ஆனால், புதிய “Omnibus VII” ஒழுங்குமுறையின் அடிப்படையில், சந்தைப்படுத்தல், வழங்கல், பயன்பாடு அனைத்தும் தடை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், Lova போன்ற நிறுவனங்கள், TPO-க்கு மாற்றான சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளன. சில தொழில்துறைகள் முன்னதாகவே புதிய சூத்திரங்களை உருவாக்கி வந்துள்ளன. 2023-இல், மருத்துவ அகாடமி UV/LED நீல ஒளி விளக்குகளும் தோல் செல்களின் DNA-வை சேதப்படுத்தி புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரித்ததமையும் குறிப்பிடதக்கது.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்