உடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை...!!
10 சித்திரை 2021 சனி 08:53 | பார்வைகள் : 12849
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழையின் மடலில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். அலர்ஜி, கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரித்து, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனை கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1

























Bons Plans
Annuaire
Scan