இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி

26 ஆவணி 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 139
இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம் என சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
உக்ரைனின் சுதந்திர தினத்தன்று வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனின் சுதந்திர தினத்தன்று வாழ்த்துக்கள் தெரிவித்த மோடிக்கு நன்றி.
அமைதியை உருவாக்க முயற்சிக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இப்போது, முழு உலகமும் இந்த கொடூரமான போரை கண்ணியத்துடனும் நீடித்த அமைதியுடனும் முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுகையில், இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம்.
ராஜதந்திரத்தை வலுப்படுத்தும் ஒவ்வொரு முடிவும் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பாலும் சிறந்த பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3