பிரான்சுவா பெய்ரூ அரசாங்கத்துக்கு சிக்கல்! - நம்பிக்கை வாக்கெடுப்பு!!
.jpg)
26 ஆவணி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2930
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ மீதான அரசாங்கம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சபையில் பெரும்பான்மை கொண்டிராத மக்ரோனின் அரசாங்கத்துக்கு மீண்டும் நெருக்கடிகள் எழுந்துள்ளன.
செப்டம்பர் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. வரவுசெலவுத்திட்டத்தினை 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்ற உள்ளதை அடுத்து, எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்கிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சுவா பெய்ரூ கடந்த டிசம்பர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். பலமுறை 49.3 அரசியலமைப்பை அவர் பயன்படுத்தி வாக்கெடுப்பின்றி சட்டங்களையும், வரவுசெலவு திட்டங்களையும் நிறைவேற்றியிருந்தார். நம்பிக்கை இல்லா பிரேரணை பல முறை கொண்டுவரப்பட்டு, அதில் எல்லாம் தப்பித்திருந்தார். அதை அடுத்து அவர் தற்போது இறுக்கமான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.