வேகமெடுக்கும் சிக்கன்குனியா! - 15 பேர் மருத்துவமனையில்..!!

26 ஆவணி 2025 செவ்வாய் 12:58 | பார்வைகள் : 363
சிக்கன்குனியா காய்ச்சல் பரவல் தீவிரமெடுத்துள்ளது. Bergerac (Dordogne) நகரில் மட்டும் 15 பேர் காய்ச்சலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சு சுகாதார நிறுவனம் (ARS) தடுப்பு நடவடிக்கைகள் பலவற்ற மேற்கொண்டுள்ள போதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் அண்மையில் வேறு நகரங்களுக்கோ, நாடுகளுக்கோ பயணித்திருக்கவில்லை எனவும், இதனால் காய்ச்சல் பிரான்சில் இருந்தே பரவி ஏனையவர்களுக்கு பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த மாதம் பிரான்சின் ரீயூனியன் (Reunion) தீவினை சிக்கன்குனியா ஆக்கிரமித்திருந்தமையும், அதன்பின்னர் வேகமான நடவடிக்கைகள் மூலம் அவை கட்டுப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3