பூனையின் மியாவ் ஒலிக்காக €110 அபராதம்: SNCF விளக்கம்!!

26 ஆவணி 2025 செவ்வாய் 22:22 | பார்வைகள் : 776
பரிஸ் முதல் வான் (Vannes) செல்லும் SNCF ரயில்வண்டியில் பயணித்த கமீ (Camille) என்ற பெண், தனது பூனையான "மோனே (Monet)" இடையறாத மியாவ் ஒலியால் €110 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
பூனைக்கு பயண டிக்கெட் வாங்கப்பட்டிருந்தும், பாதுகாப்பாக பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தும், அருகில் இருந்த பயணிகள் புகாரின் அடிப்படையில் ஒரு பரிசோதகர் அபராதம் விதித்ததாக அவர் கூறியுள்ளார்.
SNCF நிறுவனம் இதை மறுக்கிறது. அவர்கள் கூறுகையில், மியாவ் ஒலி காரணமாக அல்லாது, மற்ற பயணிகளுடன் ஏற்பட்ட பதற்றம் மற்றும் புகார்களால், பூனையை வைத்திருந்தவரிடம் இடம் மாற்றக் கேட்டுள்ளனர்; ஆனால் அவர் மறுத்துள்ளார்.
நிறுவனத்தின் தரப்பில், சம்பவம் குறித்த விரிவான விளக்கம் பெற பயணியுடன் தொடர்பு கொண்டு, அபராதத்தை மீள பரிசீலிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3