Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து - 3 பேர் பலி

இங்கிலாந்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து - 3 பேர் பலி

27 ஆவணி 2025 புதன் 05:46 | பார்வைகள் : 1036


இங்கிலாந்தின் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் வென்ட்நொர் பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஐஸ்லி ஆப் வைட் தீவின் சன்டவுண் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ராபின்சன் ஆர்44 ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் 4 பேர் பயணித்தனர். குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு சவுத்ஆம்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்