"ஜோர்டான் பார்டெல்லாவுடன் பிரான்ஸ்" என்ற பேஸ்புக் குழுவில் இனவெறி கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது விசாரணை!!

27 ஆவணி 2025 புதன் 16:32 | பார்வைகள் : 1616
ஜோர்டன் பார்டெல்லாவுடன் (Jordan Bardella) இருக்கும் பிரான்ஸ் என்ற பேஸ்புக் குழுவில் இனவாதக் கருத்துகள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கருத்துகளை எழுதிய நபர்களை அடையாளம் காண தேசிய ஆன்லைன் வெறுப்பை எதிர்க்கும் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த குழுவில் வலதுசாரியான தேசிய ஒருங்கிணைப்பு கட்சியின் (RN) உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்துள்ளனர், எனவே நாடாளுமன்ற உறுப்பினர் தோமாஸ் போர்ட் (Thomas Portes) இந்த விவகாரத்தை நீதித்துறைக்கு அறிவித்துள்ளார்.
இந்த குழுவில் "அரபுகளே வெளியேறு", "பிரான்ஸை யூதர்கள் ஆளுகிறார்கள்" போன்ற பல ஆபத்தான, இனவாதக் கருத்துகள் பகிரப்பட்டன. இதனால் RN கட்சி தனது உறுப்பினர்களை இந்தவகை குழுக்களிலிருந்து விலக உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம், கட்சி இன்னும் முழுமையாக தொழில்முறையற்ற தன்மையையும், 2024ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது RN கட்சியில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் கடந்த காலத்தில் கூறிய இனவாதப் பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியதை நினைவுபடுத்துகிறது.