அழகு நன்மைகளை அள்ளித்தரும் கற்றாழை !!
2 சித்திரை 2021 வெள்ளி 11:16 | பார்வைகள் : 10176
கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.
கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. ஆனால் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக செடிகளை பிய்த்து அதன் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
தேன், மஞ்சள் தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்.
வயதாவதால் ஏற்படும் புள்ளிகள், பிம்பிள் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்க, கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் முகத்தை கழுவ வேண்டும்.
கற்றாழை மற்றும் வாழைப்பழம் மாய்ஸ்சரைசிங் தன்மை மற்றும் பளபள வைக்கும் பேஸ் மாஸ்க். இது எல்லா வகையான சருமத்திற்கும் குறிப்பாக, வழக்கமான, எளிதில் பாதிக்கும் சருமத்திற்கு மிகவும் ஏற்றது.