பிரான்சுவா பெய்ரூவின் வீழ்ச்சி பிரான்சுக்கு 12 பில்லியன் யூரோக்கள் செலவாகுமா?

27 ஆவணி 2025 புதன் 21:56 | பார்வைகள் : 868
பிரான்சுவா பெய்ரூ தலைமையிலான அரசாங்கம் செப்டம்பர் 8ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. பெரும்பான்மை இல்லாததால் அவர் பதவியிலிருந்து விலக நேரிடலாம்.
"Ensemble pour la République" கட்சியின் பிரதிநிதி, முன்னாள் அமைச்சர் மற்றும் அரசாங்க செய்தித் தொடர்பாளர், ப்ரிஸ்கா தேவ்னோ (Prisca Thévenot), பெய்ரூ வீழ்ந்தால் பிரான்ஸுக்கு 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது முந்தைய அரசாங்க வீழ்ச்சியைக் கொண்டு கூறப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது.
அந்த மதிப்பீடு சர்ச்சைக்குரியதாக இருந்தது. 2024ல் மிசேல் பார்னியரின்
(Michel Barnier) அரசாங்கம் தள்ளுபடி செய்யபட்டபோது ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து கணிக்கப்பட்டது. ஆனால் அது வேறு காலகட்டம், வேறு பட்ஜெட். OFCE மற்றும் Banque de France ஆய்வுகளின்படி, மொத்த பாதிப்பு 0.3% PIB இழப்பாக (சுமார் 9 பில்லியன் யூரோ) இருந்தது. இதில் பார்னியரின் வீழ்ச்சி காரணமானது சுமார் 3 பில்லியன் யூரோ மட்டுமே.
எனவே, பய்ரூ வீழ்ச்சி 12 பில்லியன் யூரோ இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை.இது கடந்த அரசியல் சூழ்நிலையை மையமாகக் கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய கணக்கீட்டின் மதிப்பீடு மட்டுமே.