பிரோன்சுவா பய்ரூவின் இறுதிநேரம் - ஜோர்தான் பார்தெல்லாவின் தேர்தல் கோரிக்கை!

27 ஆவணி 2025 புதன் 23:13 | பார்வைகள் : 428
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ பிரெஞ்சு மக்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார், அதேநேரம் தேசியப் பேரணியான RN (Rassemblement National) கட்சியின் தலைவர் ஜோர்தான் பார்தெல்லா ஜனாதிபதி எமானுவல் மக்ரோனை 'தேர்தலுக்கு திரும்பக்' கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜோர்தான் பார்தெல்லா: 'சட்டமன்றத்தை கலைக்கவும் அல்லது ஜனாதிபதி பதவி விலகவும்'
சோசலிச கட்சி (PS): 'கலைப்பை நாங்கள் விரும்பவில்லை, ஜனாதிபதி பதவி விலகலை கோரவில்லை'
என முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
செப்டம்பர் 8 அன்று நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு இந்த அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. பிரதமர் பைரூ தனது அரசாங்கம் தோல்வியடையும் சூழ்நிலையில், ஜனாதிபதி மாக்ரோன் இரண்டு வழிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்:
தேசிய சட்டமன்றத்தை கலைத்தல்
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகல்
என அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறுபட்டுள்ளன.
RN: உடனடி தேர்தல் கோரிக்கை
PS: நியாயமான உறுதித்தன்மைக்கு அதரவு
LFI: அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்ப்பு
என, இந்த அரசியல் நெருக்கடி பிரான்சின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக கருதப்படுகிறது.