Paristamil Navigation Paristamil advert login

28 ஆவணி 2025 வியாழன் 00:15 | பார்வைகள் : 248


பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவிற்கு அனுப்பிய இரகசிய கடிதம் ஊடகத்திலும் வெளியாகியது. பிரான்சில் யூத எதிர்ப்பு அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்த நெதான்யாகுவின் கடிதத்திற்கு பதிலளிக்கையில், "யூத எதிர்ப்பு சமயத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தக்கூடாது" என மக்ரோன் எச்சரித்தார்.

நெதான்யாகுவின் பிரான்சு குறித்த குற்றச்சாட்டுகளை "ஏற்றுக்கொள்ள முடியாதது" மற்றும் "நாட்டை அவமானப்படுத்துவது போன்றது" என மக்ரோன் குறிப்பிட்டார்

காசாவில் இடம்பெறும் "கொடிய மற்றும் சட்டவிரோத" போரை நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு அறிவுறுத்தல்

மேற்குக் கரையில் குடியேற்றங்களை நிறுத்தும் கோரிக்கையையும் மக்ரோன் தனது பதிலில் தெரிவித்திருந்தார்

நெதான்யாகு ஓகஸ்ட் 17 அன்று அனுப்பிய கடிதத்தில், "பிரான்சில் யூத எதிர்ப்பு அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதுடன், அதை சமாளிக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்காதததையும்" குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

பிரான்சின் நடவடிக்கைகள்:

2025 ஜனவரி-ஜூன் மாதங்களில் 646 யூத எதிர்ப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன

இது 2024 ஐ விட 27.5% குறைவு, ஆனால் 2023 ஐ விட அதிகம்

ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்திய பின்னர் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்தன

மக்ரோன் தனது பதிலில், "யூத எதிர்ப்பு எனும் வெறுப்பை எல்லா இடங்களிலும், எப்போதும் போராடுவதே தனது கடமை" என வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்