Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் நேட்டோ படைகள் நிலைநிறுத்தப்பட கூடாது! ரஷ்யா திட்டவட்டம்

உக்ரைனில் நேட்டோ படைகள் நிலைநிறுத்தப்பட கூடாது! ரஷ்யா திட்டவட்டம்

28 ஆவணி 2025 வியாழன் 03:38 | பார்வைகள் : 317


நேட்டோ படைகள் உக்ரைனில் நிலைநிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சியை ரஷ்யா வரவேற்றுள்ளது.

 

மேலும் இந்த நடவடிக்கை போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவும்.

 

அதே சமயம், உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதத்தில் நேட்டோவின் உறுப்பு நாடுகள் உக்ரைனில் நிலைநிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு முன்மொழிவுகளை ரஷ்யா எதிர்மறையான நடவடிக்கையாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உக்ரைன் உடனான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக பதிலளித்த பதிலளித்த டிமிட்ரி பெஸ்கோவ், இத்தகைய பேச்சுவார்த்தைகள் முழு பயனை அடைய அவை முன்கூட்டியே நல்ல முறையில் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ரஷ்யா தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரஷ்யா இராணுவ மற்றும் இராணுவத்துடன் தொடர்புடைய இருப்புகளை மட்டுமே தாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்