தென்கொரியாவில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை

28 ஆவணி 2025 வியாழன் 10:57 | பார்வைகள் : 200
தென்கொரியாவில் 2026 ஆம் ஆண்டு முதல் பாடசாலையில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இங் பாடசாலையில் மாணவர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
தென்கொரியாவில் பாடசாலை மாணவ - மாணவிகளிடையே கையடக்க தொலைபேசி பயன்பாடு அதிகரித்து வந்தது.
இதனால் பாலியல் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் பயன்பாடு, ஒன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி சீரழிவதாக முறைப்பாடு எழுந்தது.
எனவே பாடசாலையில் மாணவ-மாணவிகள் கையடக்க தொலைபேசி பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தென்கொரிய ஜனாதிபதி மாணவர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர்.