தோல் புற்றுநோயால் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் கிளார்க் பாதிப்பு

28 ஆவணி 2025 வியாழன் 10:57 | பார்வைகள் : 125
தோல் புற்றுநோய் தொடர்பாக அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் அவுஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க்.
2015 ஆம் ஆண்டு அணித்தலைவராக உலகக்கோப்பையை வென்று கொடுத்த அவர், 2015 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு பின்னர் ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட தோல் புற்றுநோய் குறித்து மைக்கேல் கிளார்க் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவித்துள்ள அவர், "தோல் புற்றுநோய் உண்மையான ஒன்று, முக்கியமாக அவுஸ்திரேலியாவில்.
இன்று எனது மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. உங்கள் தோலை பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
நோய் வரும் முன் காப்பது அவசியம். எனது விடயத்தில் தொடர் பரிசோதனை செய்ததால் மருத்துவர்கள் புற்றுநோயை முன்னரே கண்டறிந்தனர்" என தெரிவித்துள்ளார்.