ஆட்சி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் - மானுவெல் வால்ஸ் எச்சரிக்கை

28 ஆவணி 2025 வியாழன் 13:25 | பார்வைகள் : 310
முன்னாள் பிரெஞ்சு பிரதமர் மானுவெல் வால்ஸ், அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் குறித்து சோசலிச கட்சி (PS) மற்றும் குடியரசுக் கட்சிகள் (LR) இடையே உடனடி ஒப்பந்தம் அவசியம் என எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைப்பது "விஷம்",
PS மற்றும் LR கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என அறிவுறுத்தல்,
செப்டம்பர் 8 நம்பிக்கை வாக்கெடுப்பு முக்கியமானது என வால்ஸ் குறிப்பிட்டார்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், PS மற்றும் மையக் கட்சிகள் "கிட்டத்தட்ட மறைந்துவிடும்" அபாயம்
LFI மற்றும் RN கட்சிகள் நிதி விவகாரங்களில் "ஒரே மாதிரியான திட்டங்களை" கொண்டுள்ளன
"ஆட்சி முறை நெருக்கடி" ஏற்படும் அபாயம்
எனவும் வால்ஸ் எச்சரிக்கைகள் வழங்கியுள்ளார்.
அரசியல் நிலை:
பிரெஞ்சு மக்களின் 57% நாடாளுமன்ற கலைப்பை ஆதரிக்கிறார்
வால்ஸ் இந்த கருத்துக்கு எதிராக "குறிப்பானத் தீர்வுகள்" தேவை எனக் கூறினார்.
நியூ காலிடோனியா விவகாரமும் தேசிய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தது.
தீர்வுக்கான பரிந்துரைகள்:
PS மற்றும் LR கட்சிகள் மேசைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்
பற்றாக்குறை மற்றும் கடன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்
செப்டம்பர் இறுதியில் நியூ காலிடோனியா குறித்த சட்டமன்ற விவாதம் நடாத்த வேண்டும்
வால்ஸ் இறுதியாக எச்சரித்ததாவது: "வரவு-செலவுத் திட்டம் குறித்த ஒப்பந்தம் இல்லையென்றால், நாம் ஆட்சி முறை நெருக்கடியில் சிக்கிவிடோம்."
மனுவவல் வால்ஸ் மீண்டும் மக்ரோன் - பய்ரூ அரசிற்கு முட்டுக் கொடுக்க வந்து விட்டார்!