பிரான்சில் 2,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் வீதிகளில்...!!

28 ஆவணி 2025 வியாழன் 12:15 | பார்வைகள் : 412
பிரான்சில் 2,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் வீதிகளில் உறங்குவதாக Fédération des acteurs de la solidarité (FAS) தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால தங்குமிடம் இல்லாமல் 2,159 சிறுவர்கள் வீதிகளில் உறங்குவதாகவும், அவற்றில் 503 பேர் மூன்று வயதுக்கும் குறைந்த குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வீடற்றவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட நடப்பு ஆண்டில் 6% சதவீதம் அதிகரிரத்துள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 30% சதவீதம் அதிகமாகும்.
வீடற்றவர்கள் பிரான்சின் அனைத்து நகரங்களிலும் உள்ளதாகவும், குறிப்பாக Île-de-France, Auvergne-Rhône-Alpes, மற்றும் Occitanie மாகாணங்களில் அதிகமாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.